கணபதி வழிபாடு
இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள் !
ஆயிரத்தெண் விநாயகர் ஆலயம், ஆறுமுகமங்கலம்
இங்கு ஆதிசங்கரர் கணேச பஞ்சரத்தினம் பாடினார்.
மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் திருக்கோயில், திருச்சி
அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயில், பிள்ளையார்பட்டி
அருள்மிகு துண்டுகை விநாயகர் திருக்கோயில், திருச்செந்தூர்
ஸ்ரீ செல்வ மாணிக்க பிள்ளையார், கதிர்காமம் ஸ்ரீலங்கா
ஸ்ரீ கணேசா கோயில் , நாஷ்வில். டெனிஸீ,அமெரிக்கா
தமிழ் மற்றும் தமிழகதில் பாடிய பாடல்கள்
ஔவையார் |
ஆதிசங்கரர் |
அருணகிரி நாதர் |
குமரகுருபரர் |
பாரதியார் |
வ.வு.சி |
||||
|
அருணகிரி நாதர் |
|
---|---|
கந்தர் அனுபூதி - காப்பு |
நெஞ்சக் கனகல்லு நெகிழ்ந் துருகத் தஞ்சத் தருள்சண் முகனுக் கியல்சேர் செஞ்சொற் புனைமாலை சிறந் திடவே பஞ்சக் கரவானை பதம் பணிவாம். |
திருப்புகழ் - விநாயகர் துதி :1 |
தத்தன தனதன தத்தன தனதன தத்தன தனதன ...... தனதான கைத்தல நிறைகனி அப்பமொ டவல்பொரி கப்பிய கரிமுகன் ...... அடிபேணிக் கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ கற்பகம் எனவினை ...... கடிதேகும் மத்தமு மதியமும் வைத்திடும் அரன்மகன் மற்பொரு திரள்புய ...... மதயானை மத்தள வயிறனை உத்தமி புதல்வனை மட்டவிழ் மலர்கொடு ...... பணிவேனே முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில் முற்பட எழுதிய ...... முதல்வோனே முப்புரம் எரிசெய்த அச்சிவன் உறைரதம் அச்சது பொடிசெய்த ...... அதிதீரா அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும் அப்புன மதனிடை ...... இபமாகி அக்குற மகளுடன் அச்சிறு முருகனை அக்கண மணமருள் ...... பெருமாளே. |
திருப்புகழ் - விநாயகர் துதி :2 |
தத்ததன தத்ததன தத்ததன தத்ததன தத்ததன தத்ததன ...... தனதான பக்கரைவி சித்ரமணி பொற்கலணை யிட்டநடை பட்சியெனு முக்ரதுர ...... கமுநீபப் பக்குவம லர்த்தொடையும் அக்குவடு பட்டொழிய பட்டுருவ விட்டருள்கை ...... வடிவேலும் திக்கதும திக்கவரு குக்குடமும் ரட்சைதரு சிற்றடியு முற்றியப ...... னிருதோளும் செய்ப்பதியும் வைத்துயர்தி ருப்புகழ்வி ருப்பமொடு செப்பெனஎ னக்கருள்கை ...... மறவேனே இக்கவரை நற்கனிகள் சர்க்கரைப ருப்புடனெய் எட்பொரிய வற்றுவரை ...... இளநீர்வண் டெச்சில்பய றப்பவகை பச்சரிசி பிட்டுவெள ரிப்பழமி டிப்பல்வகை ...... தனமுலம் மிக்கஅடி சிற்கடலை பட்சணமெ னக்கொளொரு விக்கிநச மர்த்தனெனும் ...... அருளாழி வெற்பகுடி லச்சடில விற்பரம ரப்பரருள் வித்தகம ருப்புடைய ...... பெருமாளே. |
திருப்புகழ் - விநாயகர் துதி :3 |
தந்ததனத் தானதனத் ...... தனதான உம்பர்தருத் தேநுமணிக் ...... கசிவாகி ஒண்கடலிற் றேனமுதத் ...... துணர்வூறி இன்பரசத் தேபருகிப் ...... பலகாலும் என்றனுயிர்க் காதரவுற் ...... றருள்வாயே தம்பிதனக் காகவனத் ...... தணைவோனே தந்தைவலத் தாலருள்கைக் ...... கனியோனே அன்பர்தமக் கானநிலைப் ...... பொருளோனே ஐந்துகரத் தானைமுகப் ...... பெருமாளே. |
திருப்புகழ் - விநாயகர் துதி :4 |
தனன தனதன தத்தன தத்தன தனன தனதன த்ததன தத்தன தனன தனதன த்ததன தத்தன ...... தனதான நினது திருவடி சத்திம யிற்கொடி நினைவு கருதிடு புத்திகொ டுத்திட நிறைய அமுதுசெய் முப்பழ மப்பமு ...... நிகழ்பால்தேன் நெடிய வளைமுறி இக்கொடு லட்டுகம் நிறவில் அரிசிப ருப்பவல் எட்பொரி நிகரில் இனிகத லிக்கனி வர்க்கமும் ...... இளநீரும் மனது மகிழ்வொடு தொட்டக ரத்தொரு மகர சலநிதி வைத்தது திக்கர வளரு கரிமுக ஒற்றைம ருப்பனை ...... வலமாக மருவு மலர்புனை தொத்திர சொற்கொடு வளர்கை குழைபிடி தொப்பண குட்டொடு வனச பரிபுர பொற்பத அர்ச்சனை ...... மறவேனே தெனன தெனதென தெத்தென னப்பல சிறிய அறுபத மொய்த்துதி ரப்புனல் திரளும் உறுசதை பித்தநி ணக்குடல் ...... செறமுளை செரும உதரநி ரப்புசெ ருக்குடல் நிரைய அரவநி றைத்தக ளத்திடை திமித திமிதிமி மத்தளி டக்கைகள் ...... செகசேசே எனவெ துகுதுகு துத்ததென ஒத்துகள் துடிகள் இடிமிக ஒத்துமு ழக்கிட டிமுட டிமுடிமு டிட்டிமெ னத்தவில் ...... எழுமோசை இகலி அலகைகள் கைப்பறை கொட்டிட இரண பயிரவி சுற்றுந டித்திட எதிரு நிசிசர ரைப்பெலி யிட்டருள் ...... பெருமாளே. |
திருப்புகழ் - விநாயகர் துதி :5 |
தனதனன தான தனதனன தான தனதனன தான ...... தனதான விடமடைசு வேலை அமரர்படை சூலம் விசையன்விடு பாண ...... மெனவேதான் விழியுமதி பார விதமுமுடை மாதர் வினையின் விளை வேதும் ...... அறியாதே கடியுலவு பாயல் பகலிரவெ னாது கலவிதனில் மூழ்கி ...... வறிதாய கயவனறி வீனன் இவனுமுயர் நீடு கழலிணைகள் சேர ...... அருள்வாயே இடையர்சிறு பாலை திருடிகொடு போக இறைவன்மகள் வாய்மை ...... அறியாதே இதயமிக வாடி யுடையபிளை நாத கணபதியெ னாம ...... முறைகூற அடையலவர் ஆவி வெருவஅடி கூர அசலுமறி யாமல் ...... அவரோட அகல்வதென டாசொல் எனவுமுடி சாட அறிவருளும் ஆனை ...... முகவோனே. |
ஆதிசங்கரர் |
|
---|---|
கணேச பஞ்சரத்தினம் - ஸமஸ்கிர்தம் |
முதா கராத்த மோதகம் ஸதா விமுக்தி ஸாதகம் | களாதராவதம்ஸகம் விலாஸிலோக ரக்ஷகம் | அனாயகைக னாயகம் வினாஶிதேப தைத்யகம் | னதாஶுபாஶு னாஶகம் னமாமி தம் வினாயகம் || 1 || னதேதராதி பீகரம் னவோதிதார்க பாஸ்வரம் | னமத்ஸுராரி னிர்ஜரம் னதாதிகாபதுத்டரம் | ஸுரேஶ்வரம் னிதீஶ்வரம் கஜேஶ்வரம் கணேஶ்வரம் | மஹேஶ்வரம் தமாஶ்ரயே பராத்பரம் னிரன்தரம் || 2 || ஸமஸ்த லோக ஶங்கரம் னிரஸ்த தைத்ய குஞ்ஜரம் | தரேதரோதரம் வரம் வரேப வக்த்ரமக்ஷரம் | க்றுபாகரம் க்ஷமாகரம் முதாகரம் யஶஸ்கரம் | மனஸ்கரம் னமஸ்க்றுதாம் னமஸ்கரோமி பாஸ்வரம் || 3 || அகிஞ்சனார்தி மார்ஜனம் சிரன்தனோக்தி பாஜனம் | புராரி பூர்வ னன்தனம் ஸுராரி கர்வ சர்வணம் | ப்ரபஞ்ச னாஶ பீஷணம் தனஞ்ஜயாதி பூஷணம் | கபோல தானவாரணம் பஜே புராண வாரணம் || 4 || னிதான்த கான்தி தன்த கான்தி மன்த கான்தி காத்மஜம் | அசின்த்ய ரூபமன்த ஹீன மன்தராய க்றுன்தனம் | ஹ்றுதன்தரே னிரன்தரம் வஸன்தமேவ யோகினாம் | தமேகதன்தமேவ தம் விசின்தயாமி ஸன்ததம் || 5 || மஹாகணேஶ பஞ்சரத்னமாதரேண யோஉன்வஹம் | ப்ரஜல்பதி ப்ரபாதகே ஹ்றுதி ஸ்மரன் கணேஶ்வரம் | அரோகதாமதோஷதாம் ஸுஸாஹிதீம் ஸுபுத்ரதாம் | ஸமாஹிதாயு ரஷ்டபூதி மப்யுபைதி ஸோஉசிராத் || |
ஆசிரியர் - ஔவையார் |
|
---|---|
நல்வழி - கடவுள் வாழ்த்து |
பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை நாலும் கலந்துனக்கு நான் தருவேன் - கோலம்செய் துங்கக் கரிமுகத்து தூமணியே நீ எனக்கு சங்கத் தமிழ் மூன்றும் தா |
மூதுரை - கடவுள் வாழ்த்து |
வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள் நோக்குண்டாம் மேனி நுடங்காது -பூக்கொண்டு துப்பார் திருமேனி தும்பிக்கை யான்பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு |
விநாயகர் அகவல் |
சீதக் களபச் செந்தா மரைப்பூம் பாதச் சிலம்பு பலவிசை பாடப் பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும் வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப் பேழை வயிறும் பெரும்பாரக் கோடும் (05) வேழ முகமும் விளங்குசிந் தூரமும் அஞ்சு கரமும் அங்குச பாசமும் நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும் நான்ற வாயும் நாலிரு புயமும் மூன்று கண்ணும் மும்மதச் சுவடும் (10) இரண்டு செவியும் இலங்குபொன் முடியும் திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும் சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான அற்புதம் ஈன்ற கற்பகக் களிறே! முப்பழ நுகரும் மூஷிக வாகன! (15) இப்பொழு தென்னை ஆட்கொள வேண்டித் தாயா யெனக்குத் தானெழுந் தருளி மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத் திருந்திய முதலைந் தெழுத்தும் தெளிவாய்ப் பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து (20) குருவடி வாகிக் குவலயந் தன்னில் திருவடி வைத்துத் திறமிது பொருளென வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக் கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில் (25) தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம் இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக் கருவிக ளொடுங்கும் கருத்தினை யறிவித்(து) இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து (30) தலமொரு நான்கும் தந்தெனக் கருளி மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால் ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி ஆறா தாரத்(து) அங்குச நிலையும் (35) பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக் கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின் நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக் (40) குண்டலி யதனிற் கூடிய அசபை விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக் காலால் எழுப்பும் கருத்தறி வித்தே அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும் (45) குமுத சகாயன் குணத்தையும் கூறி இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும் உடல்சக் கரத்தின் உறுப்பையும் காட்டிச் சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும் எண் முகமாக இனிதெனக் கருளிப் (50) புரியட்ட காயம் புலப்பட எனக்குத் தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக் கருத்தினில் கபால வாயில் காட்டி இருத்தி முத்தி யினிதெனக் கருளி என்னை யறிவித்(து) எனக்கருள் செய்து (55) முன்னை வினையின் முதலைக் களைந்து வாக்கும் மனமும் இல்லா மனோலயம் தேக்கியே யென்றன் சிந்தை தெளிவித்(து) இருள்வெளி யிரண்டுக்(கு) ஒன்றிடம் என்ன அருள்தரும் ஆனந்தத்(து) அழுத்தியென் செவியில் (60) எல்லை யில்லா ஆனந் தம்அளித்(து) அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச் சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச் சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி அணுவிற்(கு) அணுவாய் அப்பாலுக்(கு) அப்பாலாய்க் (65) கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி வேடமும் நீறும் விளங்க நிறுத்திக் கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத் (70) தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட வித்தக விநாயக விரைகழல் சரணே! (72) |
ஆசிரியர் - குமரகுருபரர் |
|
---|---|
மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் விநாயக வணக்கம் |
கார்கொண்ட கவுண்மதக் கடைவெள்ள முங்கட் கடைக்கடைக் கனலு மெல்லை கடவாது தடவுக் குழைச்செவி முகந்தெறி கடைக்கா றிட்ட வெங்கோன் போர்கொண்ட வெண்டோ ட்பொலன்குவடு பொதியும்வெண் பொடிதுடி யடித்து வைத்துப் புழுதியாட் டயராவொ ரயிராவ ணத்துலவு பொற்களிற் றைத்து திப்பாந் தார்கொண்ட மதிமுடி யொருத்தன் றிருக்கண்மலர் சாத்தக் கிளர்ந்து பொங்கித் தவழுமிள வெயிலுமழ நிலவுமள வளவலாற் றண்ணென்று வெச்சென்று பொன் வார்கொண்ட டணிந்தமுலை மலைவல்லி கர்ப்பூர வல்லியபி ராம வல்லி மாணிக்க வல்லிமர கதவல்லி யபிடேக வல்லி சொற் றமிழ் தழையவே. |
ஆசிரியர் - பாரதியார் |
|
---|---|
விநாயகர் நான்மணிமாலை |
வெண்பா சக்திபெறும் பாவாணர் சாற்றுபொருள் யாதெனினும் சித்திபெறச் செய்வாக்கு வல்லமைக்கா - அத்தனே! நின்றனுக்குக் காப்புரைப்பார் நின்மீது செய்யுநூல் இன்றிதற்குங் காப்பு நீயே. (1) கலித்துறை நீயே சரணம் நின தருளே சரணஞ் சரணம் நாயேன் பலபிழை செய்து களைத்துனை நாடிவந்தேன் வாயே திறவாத மௌனத் திருந்துன் மலரடிக்குத் தீயே நிகர்த்தொளி வீசுந் தமிழ்க்கவி செய்குவனே. (2) விருத்தம் செய்யுந்தொழிலுன் தொழிலே காண்; சீர்பெற்றிட நீ யருள் செய்வாய், வையந் தனையும் வெளியினையும் வானத்தையு முன் படைத்தவனே! ஐயா, நான் முகப் பிரமா, யானைமுகனே, வாணிதனைக் கையாலணைத்துக் காப்பவனே, கமலா சனத்துக் கற்பகமே. அகவல் கற்பக விநாயகக் கடவுளே, போற்றி! சிற்பர மோனத் தேவன் வாழ்க! வாரண முகத்தான் மலர்த்தாள் வெல்க! ஆரண முகத்தான் அருட்பதம் வெல்க! படைப்பபுக் கிறையவன் பண்ணவர் நாயகன் 5 இந்திர குரு என திதயத் தொளிர்வான் சந்திரமவுலித் தலைவன் மைந்தன் கணபதி தாளைக் கருத்திடை வைப்போம்; குணமதிற் பல வாம்; கூறக் கேளீர்; உட்செவி திறக்கும்; அகக்கண் ஒளிதரும்; 10 அக்கினி தோன்றும்; ஆண்மை வலியுறும்; திக்கெல்லாம் வென்று ஜயக்கொடி நாட்டலாம் கட்செவி தன்னைக் கையிலே எடுக்கலாம்; விடத்தையும் நோவையும் வெம்பகை யதனையும் துச்ச மென்றெண்ணித் துயரிலா திங்கு 15 நிச்சலும் வாழ்ந்து நிலை பெற்றோங்கலாம்; அச்சம் தீரும்; அமுதம் விளையும்; வித்தை வளரும்; வேள்வி யோங்கும்; அமரத் தன்மையு மெய்தவும் இங்கு நாம் பெறலாம்; இ·துணர் வீரே. 20 கமலா சனத்துக் கற்பகமே. (4) வெண்பா உணர்வீர், உணர்வீர் உலகத்தீரிங்குப் புணர்வீர் அமரருறும் போகம் - கணபதியைப் போதவடி வாகப் போற்றிப் பணிந்திடுமின் காதலுடன் கஞ்சமலர்க் கால். கமலா சனத்துக் கற்பகமே. (5) கலித்துறை காலைப் பிடித்தேன் கணபதி நின்பதங் கண்ணிலொற்றி நூலைப் பல பலவாகச் சமைத்து நொடிப்பொழுதும் வேலைத் தவறு நிகழாது நல்ல வினைகள் செய்துன் கோலை மனமெனு நாட்டி னிறுத்தல் குறியெனக்கே. கமலா சனத்துக் கற்பகமே. (6) விருத்தம் எனக்கு வேண்டும் வரங்களை யிசைப்பேன் கேளாய் கணபதி, மனத்திற் சலன மில்லாமல், மதியிலிருளே தோன்றாமல், நினைக்கும் பொழுது நின் மவுன நிலை வந்திட நீ செயல்வேண்டும். கனக்குஞ் செல்வம் நூறு வய திவையுந்தர நீகடவாயே. கமலா சனத்துக் கற்பகமே. (7) அகவல் கடமை யாவன தன்னைக் கட்டுதல், பிறர் துயர் தீர்த்தல், பிறர் நலம் வேண்டுதல், விநாயக தேவனாய், வேலுடைக் குமரனாய் நாராயணனாய், நதிச்சடை முடியனாய், பிற நாட்டிருப்போர் பெயர் பல கூறி, 5 அல்லா, யெஹோவா எனத் தொழுதின்புறும் தேவருந்தானாய், திருமகள், பாரதி, உமையெனுந் தேவிய ருகந்தவான் பொருளாய், உலகெங்குங் காக்கு மொருவனைப் போற்றுதல் இந் நான்கே யிப் பூமி யிலெவர்க்கும் 10 கடமை யெனப்படும்; பயனிதில் நான்காம், அறம், பொருள், இன்பம், வீடெனு முறையே. தன்னை யாளுஞ் சமர்த்தெனக் கருள்வாய், மணக்குள விநாயகா, வான்மறைத் தலைவா, தனைத்தானாளுந் தன்மை நான் பெற்றிடில், 15 எல்லாப் பயன்களுந் தாமே யெய்தும்; அசையா நெஞ்ச மருள்வாய்; உயிரெலாம் இன்புற்றிருக்க வேண்டி, நின் னிருதாள் பணிவதே தொழிலெனக் கொண்டு கணபதி தேவா, வாழ்வேன் களித்தே. 20 (8) வெண்பா களியுற்று நின்று கடவுளே யிங்குப் பழியற்று வாழ்ந்திடக் கண் பார்ப்பாய் - ஒளிபெற்றுக் கல்விபல தேர்ந்து கடமை யெலா நன்காற்றித் தொல்வினைக் கட்டெல்லாம் துறந்து. (9) கலித்துறை துறந்தார் திறமை பெரிததினும் பெரிதாகு மிங்குக் குறைந்தாரைக் காத்தெளியார்க் குண வீந்து குலமகளும் அறந்தாங்கு மக்களு நீடூழி வாழ்கென அண்டமெலாம் சிறந்தாளு நாதனைப் போற்றிடுந் தொண்டர் செயுந்தவமே. (10) விருத்தம் தவமே புரியும் வகை யறியேன், சலியா துற நெஞ்சறியாது, சிவமே நாடிப் பொழுதனைத்துந் தியங்கித் தியங்கி நிற்பேனை, நவமா மணிகள் புனைந்த முடி நாதா, கருணாலயனே, தத் துவமாகியதோர் பிரணவமே, அஞ்சேல் என்று சொல்லுதியே. (11) அகவல் சொல்லினுக் கரியனாய்ச் சூழ்ச்சிக் கரியனாய் பல்லுருவாகிப் படர்ந்த வான் பொருளை, உள்ளுயிராகி உலகங் காக்கும் சக்தியே தானாந் தனிச்சுடர்ப் பொருளை, சக்தி குமாரனைச் சந்திர மவுலியைப் 5 பணிந்தவ னுருவிலே பாவனை நாட்டி, ஓமெனும் பொருளை உளத்திலே நிறுத்தி, சக்தியைக் காக்குந் தந்திரம் பயின்று, யார்க்கும் எளியனாய், யார்க்கும் வலியனாய், யார்க்கும் அன்பனாய், யார்க்கும் மினியனாய், 10 வாழ்ந்திட விரும்பினேன்; மனமே! நீ யிதை ஆழ்ந்து கருதி, யாய்ந்தாய்ந்து, பலமுறை சூழ்ந்து, தெளிந்து, பின் சூழ்ந்தார்க்கெல்லாம் கூறிக் கூறிக் குறைவறத் தேர்ந்து, தேறித் தேறி, நான் சித்திபெற்றிடவே, 15 நின்னா லியன்ற துணைபுரி வாயேல், பொன்னா லுனக் கொரு கோயில் புனைவேன்; மனமே, எனை நீ வாழ்த்திடுவாய் வீணே உழலுதல் வேண்டா, சக்திகுமாரன் சரண் புகழ்வாயே. 20 (12) வெண்பா புகழ்வோங் கணபதிநின் பொற்கழலை நாளுந் திகழ்வோம் பெருங்கீர்த்தி சேர்ந்தே - இகழ்வோமே புல்லரக்கப் பாதகரின் பொய்யை யெலாம்; ஈங்கிதுகாண் வல்லபை கோன் தந்த வரம். (13) கலித்துறை வரமே நமக்கிது கண்டீர் கவலையும் வஞ்சனையும் கரவும் புலமை விருப்பமுமையமுங் காய்ந்தெறிந்து சிரமீது நங்கள் கணபதி தாண்மலர் சேர்தெமக்குத் தரமேகொல்வானவர் என்றுளத்தேகளிசார்ந் ததுவே (14) விருத்தம் சார்ந்து நிற்பா யெனதுளமே, சலமுங்கரவுஞ் சஞ்சலமும் பேர்ந்து பரம சிவானந்தர் பேற்றை நாடி,நாடோறும் ஆர்த்த வேதப் பொருள் காட்டும் ஐயன்,சக்திதலைப்பிள்ளை, கூர்த்த விடர்கள் போக்கிடு நங் கோமான் பாதக் குளிர் நிழலே. (15) அகவல் நிழலினும் வெயிலினு நேர்ந்தநற் றுணையாய்த் தழலினும் புனலினு மபாயந் தவிர்த்து மண்ணினுங் காற்றினும் வானினு மெனக்குப் பகைமை யொன்றின்றிப் பயந்தவிர்த் தாள்வான் உள்ளத்தோங்க நோக்குறும் விழியும் 5 மௌன வாயும் வரந்தரு கையும் உடைய நம் பெருமான் உணர்விலே நிற்பான் ஓமெனு நிலையி லொளியாத் திகழ்வான் வேத முனிவர் விரிவாப் புகழ்ந்த பிருஹஸ்பதியும் பிரமனும் யாவுந் 10 தானே யாகிய தனிமுதற் கடவுள் யானென தற்றார் ஞானமே தானாய் முக்தி நிலைக்கு மூல வித்தாவான் ஸத் தெனத் தத் தெனச் சதுர்மறை யாளர் நித்தமும் போற்று நிர்மலக் கடவுள் 15 ஏழையர்க் கெல்லாம் மிறங்கும் பிள்ளை வாழும்பிள்ளை மணக்குளப் பிள்ளை வெள்ளாடை தரித்த விட்டுணு வென்று செப்பிய மந்திரத் தேவனை முப்பொழு தேத்திப் பணிவது முறையே 20 (16) வெண்பா முறையே நடப்பாய் முழுமுட நெஞ்சே, இறையேனும் வாடா யினிமேல் - கறையுண்ட கண்டன் மகன் வேத காரணன் சக்தி மகன் தொண்டருக் குண்டு துணை. (17) கலித்துறை துணையே, யெனதுயி ருள்ளே யிருந்து சுடர் விடுக்கும் மணியே, யெனதுயிர் மன்னவனே, யென்றன் வாழ்வினுக்கோர் அணியே, யெனுள்ளத்தி லாரமுதே, யெனதற்புதமே, இணையே துனக்குரைப்பேன், கடைவானில் எழுஞ்சுடரே. (18) விருத்தம் சுடரே போற்றி, கணத்தேவர் துரையே போற்றி, எனக்கென்றும் இடரே யின்றிக் காத்திடுவாய், எண்ணா யிரங்கால் முறையிட்டேன்; படர்வான் வெளியிற் பலகோடி கோடி கோடிப் பல்கோடி இடரா தோடுமண்டலங்க ளிசைத்தாய், வாழி யிறைவனே. (19) அகவல் இறைவி இறையவ னிரண்டு மொன்றாகித் தாயாய்த் தந்தையாய் சக்தியும் சிவனுமாய் உள் ளொளியாகி யுலகெலந் திகழும் பரம் பொருளேயோ! பரம்பொருளேயோ! ஆதிமூலமே! அனைத்தையுங் காக்கும் 5 தேவ தேவா, சிவனே, கண்ணா, வேலா, சாத்தா, விநாயகா, மாடா, இருளா, சூரியா, இந்துவே, சக்தியே, வாணீ,காளீ, மாமகளேயோ, ஆணாய்ப் பெண்ணாய் அலியாய் உள்ள 10 தியாதுமாய் விளங்கு மியற்கைத் தெய்வமே; வேதச் சுடரே, மெய்யாங் கடவுளே, அபயம் அபயம் அபயம் நான் கேட்டேன், நோவு வேண்டேன், நூறாண்டு வேண்டினேன்; அச்சம் வேண்டேன், அமைதி வேண்டினேன்; 15 உடைமை வேண்டேன்,உன்துணை வேண்டினேன் வேண்டா தனைத்தையு நீக்கி வேண்டிய தனைத்தும் அருள்வதுன் கடனே. (20) வெண்பா கடமை தானேது கரிமமுகனே வையத் திடநீ யருள் செய்தா யெங்க - ளுடைமைகளு மினங்களு மெல்லா மீந்தாய் நீ யாங்களுனக் கென்புரிவோம் கைமா றியம்பு. (21) கலித்துறை இயம்பு மொழிகள் புகழ் மறை யாகு மெடுத்தவினை பயன்படும் தேவர்இருபோதும் வந்து பதந்தருவார் அயன் பதி முன்னோன் கணபதி சூரியன் ஆனைமுகன் வியன்புகழ் பாடிப் பணிவார் தமக்குறு மேன்மைகளே. (22) விருத்தம் மேன்மைப் படுவாய் மனமே கேள் விண்ணி னிடிமுன் விழுந்தாலும் பான்மை தவறி நடுங்காதே, பயத்தா லேதும் பயனில்லை, யான் முன் னுரைத்தேன் கோடிமுறை இன்னுங்கோடி முறைசொல்வேன் ஆன்மாவான கணபதியின் அருளுண் டச்ச மில்லையே. (23) அகவல் அச்ச மில்லை, அமுங்குத லில்லை, நடுங்குதலில்லை, நாணுதலில்லை, பாவ மில்லை, பதுங்குத லில்லை; ஏது நேரினு மிடர்ப்பட மாட்டோம்; அண்டஞ் சிதறினா லஞ்ச மாட்டோம்; 5 யார்க்கு மஞ்சோம்,எதற்கு மஞ்சோம்; எங்கு மஞ்சோம்,எப்பொழுது மஞ்சோம்; வான முண்டு மாரி யுண்டு, ஞாயிறுங் காற்றும் நல்ல நீரும் தீயு மண்ணுந் திங்களு மீன்களும் 10 உடலு மறிவு முயிரு முளவே; தின்னப்பொருளுஞ் சேர்ந்திடப் பெண்டும் கேட்கப் பாட்டுங் காண நல்லுலகும் களித்துரை செய்யக் கணபதி பெயரும் என்று மிங்குளவாம்; சலித்திடாய், ஏழை 15 நெஞ்சே; வாழி, நேர்மையுடன் வாழி, வஞ்சகக் கவலைக் கிடங்கொடேல் மன்னோ' தஞ்ச முண்டு, சொன்னேன், செஞ்சுடர்த் தேவன் சேவடி நமக்கே. (24) வெண்பா நமக்குத் தொழில் கவிதை நாட்டிற் குழைத்தல் இமைப் பொழுதுஞ் சோரா திருத்தல் - உமைக்கினிய மைந்தன் கணநாதன் நங்குடியை வாழ்விப்பான்; சிந்தையே, இம்மூன்றுஞ் செய். (25) கலித்துறை செய்யுங் கவிதை பராசக்தியாலே செய்யப்படுங்காண் வையத்தைக் காப்பவ ளன்னை சிவசக்தி வண்மையெலாம் ஐயத்திலுந் துரிதத்திலுஞ் சிந்தி யழிவதென்னே பையத் தொழில்புரி நெஞ்சே கணாதிபன் பக்தி கொண்டே. (26) விருத்தம் பக்தி யுடையார் காரியத்திற் பதறார், மிகுந்த பொறுமையுடன் வித்து முளைக்குந் தன்மை போல் மெல்லச் செய்து பயனடைவார் சக்தி தொழிலே யனைத்து மெனிற் சார்ந்த நமக்குச் சஞ்சலமேன்? வித்தைக் கிறைவா, கணநாதா, மேன்மைத் தொழிலிற் பணியெனையே. (27) அகவல் எனை நீ காப்பாய், யாவுமாந் தெய்வமே! பொறுத்தா ரன்றே பூமியாள்வார்; யாவு நீயாயி னனைத்தையும் ஒறுத்தல் செவ்விய நெறி யதிற் சிவநிலை பெறலாம்; பொங்குதல் போக்கிப் பொறை யெனக்கீவாய்; 5 மங்கள குணபதி மணக்குளக் கணபதி நெஞ்சக் கமலத்து நிறைந்தருள் புரிவாய்; அகல்விழி உமையா ளாசை மகனே. நாட்டினைத் துயரின்றி நன்கமைத் திடுவதும் உள்ளமெனு நாட்டை யொரு பிழை யின்றி 10 ஆள்வதும் பெரொளி ஞாயிறே யனைய சுடர்தரு மதியொடு துயரின்றி வாழ்தலும் நோக்கமாகக் கொண்டு நின்பதம் நோக்கினேன்; காத்தருள் புரிக, கற்பக விநாயகா, காத்தருள் புரிக,கடவுளே யுலகெலாம் 15 கோத்தருள் புரிக, குறிப்பரும் பொருளே அங்குச பாசமுங் கொம்புந் தரித்தாய் எங்குல தேவா, போற்றி! சங்கரன் மகனே தாளினைப் போற்றி. (28) வெண்பா போற்றி கலியாணி புதல்வனே பாட்டினிலே ஆற்ற லருளி யடியேனைத் - தேற்றமுடன் வாணிபதம் போற்றுவித்து வாழ்விப்பாய் வாணியருள் வீணையொலி என்னாவில் விண்டு. (29) கலித்துறை விண்டுரை செய்குவன் கேளாய் புதுவை விநாயகனே தொண்டுன தன்னை பராசக்திக் கென்றுந் தொடர்ந்திடுவேன் பண்டைச் சிறுமைகள் போக்கி யென்னாவிற் பழுத்த சுவைத் தெண்டமிழ்ப் பாடலொரு கோடி மேவிடச் செய்குவையே. (30) விருத்தம் செய்யா ளினியாள் ஸ்ரீ தேவி செந்தா மரையிற் சேர்ந்திருப்பாள் கையா ளெனநின் றடியேன் செய் தொழில்கள் யாவும் கைகலந்து செய்வாள்; புகழ்சேர்வாணியு மென்னுள்ளே நின்று தீங்கவிதை பெய்வாள், சக்தி துணைபுரிவாள், பிள்ளாய், நின்னைப் பேசிடிலே. அகவல் பேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன் கேட்கா வரத்தைக் கேட்க நான் துணிந்தேன். மண்மீதுள்ள மக்கள், பறவைகள், விலங்குகள், பூச்சிகள், புற்பூண்டு, மரங்கள் யாவுமென் வினையா விடும்பை தீர்ந்தே 5 இன்பமுற் றன்புட நிணங்கி வாழ்ந்திடவே செய்தல் வேண்டும், தேவ தேவா! ஞானாகா சத்து நடுவே நின்று நான் பூமண்டலத்தில் அன்பும் பொறையும் விளங்குக, துன்பமு மிடிமையு நோவுஞ் 10 சாவு நீக்கிச் சார்ந்த பல்லுயிரெலாம் இன்புற்று வாழ்க என்பேன்! இதனை நீ திருச்செவி கொண்டு திருவுள மிரங்கி 'அங்ஙனே யாகுக' என்பாய், ஐயனே! இந்நாள், இப்பொழு தெனக் கிவ்வரத்தினை 15 அருள்வாய்; ஆதி மூலமே! அநந்த சக்தி குமாரனே! சந்திர மவுலீ! நித்தியப் பொருளே சரணம் சரணம் சரணம் சரண மிங்குனக்கே. (32) வெண்பா உனக்கே யென்னாவியு முள்ளமுந் தந்தேன் மனக்கேதம் யாவினையும் மாற்றி - எனக்கே நீண்ட புகழ் வாணாள் நிறை செல்வம் பேரழகு வேண்டுமட்டும் ஈவாய் விரைந்து. (33) கலித்துறை விரைந்துன் திருவுள மென்மீ திரங்கிட வேண்டுமையா குரங்கை விடுத்துப் பகைவரின் தீவைக்கொளுத்தியவன் அரங்கத்திலே திருமாதுடன் பள்ளிகொண்டான் மருகா வரங்கள் பொழியும் முகிலே! என்னுள்ளத்து வாழ்பவனே! (34) விருத்தம் வாழ்க புதுவை மணக்குளத்து வள்ளல் பாத மணி மலரே; ஆழ்க வுள்ளஞ் சலனமிலா தகண்ட வெளிக்கண் அன்பினையே சூழ்க; துயர்கள் தொலைந்திடுக; தொலையா இன்பம் விளைந்திடுக வீழ்க கலியின் வலியெல்லாம் கிருதயுகந்தான் மேவுகவே. அகவல் மேவி மேவித் துயரில் வீழ்வாய், எத்தனை கூறியும் விடுதலைக் கிசையாய், பாவி நெஞ்சே, பார்மிசை நின்னை இன்புறச் செய்வேன்; எதற்கு மினியஞ்சேல்; ஐயன் பிள்ளையார் அருளால் உனக்கு நான் 5 அபய மிங்களித்தேன்.. நெஞ்சே நினக்கு நானுரைத்தன நிலை நிறுத்திடவே தீயிடைக் குதிப்பேன், கடலுள் வீழ்வேன், வெவ்விட முண்பேன். மேதினி யழிப்பேன்; மூடநெஞ்சே, முப்பது கோடி 10 முறையுனக் குரைத்தேன்; இன்னுமொழிவேன்; தலையிலிடி விழுந்தால் சஞ்சலப்படாதே; ஏது நிகழினு 'நமக்கேன்' என்றிரு; பராசக்தி யுளத்தின்படி யுலக நிகழும்; நமக்கேன் பொறுப்பு? நான் என்றோர் தனிப்பொருள் 15 இல்லை; நானெனும் எண்ணமே வெறும் பொய்' என்றான் புத்தன்; இறைஞ்சுவோ மவன்பதம். இனி யெப்பொழுது முரைத்திடேன். இதை நீ மறவா திருப்பாய், மடமை நெஞ்சே! கவலைப்படுதலே கரு நரகம்மா! 20 கவலையற்றிருத்தலே முக்தி; சிவனொரு மகனிதை நினக்கருள் செய்கவே. (36) வெண்பா செய்க தவம்! செய்க தவம்! நெஞ்சே! தவம் செய்தால் எய்த விரும்பியதை யெய்தலாம் - வையகத்தில் அன்பிற் சிறந்த தவமில்லை; அன்புடையார் இன்புற்று வாழ்த லியல்பு. (37) கலித்துறை இயல்பு தவறி விருப்பம் விளைத லியல்வதன்றாம் செயலிங்கு சித்த விருப்பினைப் பின்பற்றும்; சீர்மிகவே பயிலு நல்லன்பை யியல்பெனக் கொள்ளுதிர் பாரிலுள்ளீர் முயலு வினகள் செழிக்கும் விநாயகன் மொய்ம்பினிலே. (38) விருத்தம் மொய்க்கும் கவலைப் பகை போக்கி, முன்னோன் அருளைத் துணையாக்கி எய்க்கு நெஞ்சை வலியுறுத்தி யுடலை யிருப்புக் கிணையாக்கிப் பொய்க்கும் கலியை நான் கொன்று, பூலோகத்தார் கண்முன்னே, மெய்க்குங் கிருத யுகத்தினையே கொணர்வேன், தெய்வ விதியி·தே. அகவல் விதியே வாழி, விநாயகா வாழி, பதியே வாழி, பரமா வாழி, சிதைவினை நீக்கும் தெய்வமே, போற்றி! புதுவினை காட்டும் புண்ணியா, போற்றி! மதியினை வளர்க்கு மன்னே, போற்றி! 5 இச்சையுங் கிரியயு ஞானமு மென்றாக்கு மூல சக்தியின் முதல்வா, போற்றி! பிறைமதி சூடிய பெருமாள் வாழி, நிறைவினைச் சேர்க்கு நிர்மலன் வாழி, கால மூன்றையுங் கடந்தான் வாழி! 10 சக்தி தேவி சரணம் வாழி! வெற்றி வாழி, வீரம் வாழி! பக்தி வாழி, பலபல காலமும் உண்மை வாழி, ஊக்கம் வாழி! நல்ல குணங்களே நம்மிடை யமரர் 15 பதங்களாம் கண்டீர், பாரிடைமக்களே! கிருத யுகத்தினைக் கேடின்றி நிறுத்த விரத நான் கொண்டனன்; வெற்றி தருஞ்சுடர் விநாயகன் தாளிணை வாழியே! (40) |
ஆசிரியர் - சண்முக தாசன் |
|
---|---|
கந்தன் மணம்புரி சிந்து - வாழ்த்து |
கங்கா தரனற் கருணையா லீன்றெடுத்த சிங்கார ஆனைமுகத் தேசிகனே-மங்காத கந்தன் மணம் புரியக் காதல்தனை மாநிலத்தில் சிந்துகவி யானுரைக்கச் செய் |
ஆசிரியர் - திரிசிபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் |
|
---|---|
மாயூரப்புராணம் - கடவுள்வாழ்த்து |
அகத்தியவிநாயகக்கடவுள் *பூமேவுதன்னடியார்தமைவிளக்கிமுந்திருக்கைபுணர்த்தல்வல்ல தேமேவுபெருங்கருணையாளனெனறெரிப்பமறைத்திருநாமங்கள் பாமேவுபலவிருகுக்கவகத்தியமால்களிறெனும்பேர்பரித்துநாளு மாமேவுமயிலாடுதுறைத்தளிவாழ்பெருமானைவணக்கஞ்செய்வாம் *அடியாரைவிளக்கஞ்செய்து தேவர்முதலியயாவரினுமுந்தி யிருப்பச்செய்தல்தோன்ற, விநாயகக்கடவுள் திருநாமம் பலவிருக்கவும், தமது திருப்பெயர்முன், அடியார்பெயர்கொண்டாரென்பது கருத்து. *முடியும், அடியும், யானையும் பூதமுமாகிய பேருருவங் கோடலால், அதற்கேற்பப் பெரிய விநாயக ரெனத்திருப்பெயர்பூண்டு, அத்திருவுருவிற் கேற்பப் பெரிய கோயிலி லெழுந்தருளினாரென்பது கருத்து. |
ஆசிரியர் - வீரபத்திரக் கவிராயர் |
|
---|---|
குமரமலைக் குமரேசர் பிள்ளைத்தமிழ். - விநாயகர்துதி |
கங்குலெழு வன்னக் கருங்கொண்ட லென்னக் களேபரந் திகழுமிரு பான் கரதலங் கொடுவெளிக் குன்றெடுத் தோன்கருங் காயம் வெண் காய மீது பங்கமுற வீசொரு மருப்பிரு முறக்கனம் பாய்மும் மதங்கணால் வாய் யாரவஞ்சு கரமாறு சிரமெழு மணித்தோள் படைத்தவே ழத்தைநினை வாம் புங்கவர் பெருந்திருவை யெங்கள்குல வாழ்வைப் புராந்தகற் கினிய செல்வப் புத்திரப் பேற்றையடி யாருளத் தளியினொளிர் போதமய மணிவிளக் கைச் சங்கமா தவர்தேடு மாதபோ நிதியினைச் சாட்குணிய வடிவ மோங்கு சற்குருவை நற்குமர வெற்பரசை யற்பினொடு சந்தத முகந்த ருளவே. (4) |
ஆசிரியர் - புலவர் காளமேகம் |
|
---|---|
காப்பு |
ஏர்ஆனைக் காவில்உறை என்ஆனைக்கு அன்று அளித்த போர் ஆனைக் கன்றுதனைப் போற்றினால் - வாராத புத்திவரும்; பத்திவரும்; புத்திரஉற்பத்திவரும்; சக்திவரும்; சித்திவரும் தான். |
ஆசிரியர் - சபாபதி முதலியார் |
|
---|---|
குமரக்கோட்டக் கலம்பகம் - விகடசக்கர விநாயகர் காப்பு. |
புகழ்வாய்ந்த காஞ்சீ புரிக்குமர கோட்டக் குகனார் கலம்பகத்தைக் கூற - நகமா முகடசக்க ரக்கரியை மொய்ம்பிறுத்தோ னீன்ற விகடசக்க ரக்கரியை வேண்டு (1) |
ஆசிரியர் - வ. சு. செங்கல்வராயர் |
|
---|---|
தணிகைப் பத்து - காப்பு |
கொம்பாற் கதைஎழுது கோவே! தணிகேசர் ”எம்பாவை” ”பள்ளி எழுச்சி” யெனும் - எம்பாவை உன்னருளால் வந்த உயர்நூல்கள் என்றுணர்ந்திங் குன்னி மகிழும் உலகு. |
ஆசிரியர் - சிவப்பிரகாச சுவாமிகள் |
|
---|---|
பிரபு லிங்கலீலை - காப்பு |
சுரகு லாதிபன் தூய்மலர் நந்தனம் பெருக வார்கடற் பெய்த வயிற்றினோன் கரக நீரைக் கவிழ்த்த மதகரி சரணம் நாளும் தலைக்கணி யாக்குவாம். |
ஆனைமுகக் கடவுள் |
மாரன் எடுத்து வளைக்குமொரு கரும்பை ஒடித்து மலர்சிதறி நாரி யடுத்த அளிமாலை குலையத் துரந்து நயந்தோடி வீர மனத்து வினைப்பாகர் குறிப்பி னொழுகி விளையாடும் ஈர மதிஞ்செஞ் சடைக்களிநல் யானை யிணைத்தாள் ஏத்துவாம். |
ஆசிரியர் - தீர்த்தகிரித் தேசிகர் |
|
---|---|
இரத்தினபுரிப் புராணம் - விநாயகர் காப்பு |
விடங்கொண் டமரர் குலம்வாழ வெள்ளி வரையி லுமையுடனே யிடங்கொண் டவரை வலங்கொண்டே யினிய கனியைத் தனிவாங்கும் படங்கொண் டிலங்கும் பணியகட்டுப் பகட்டு முகத்துக் காரனைய கடங்கொண் டிருந்த கணபதிதன் கமல பதத்தை வணங்குவாம். |
ஆசிரியர் - கச்சிஅப்பர் |
|
---|---|
கந்த புராணம் - விநாயகர் காப்பு |
திகட சக்கரச் செம்முக மைந்துளான் சகட சக்கரத் தாமரை நாயகன் அகட சக்கர வின்மணி யாவுறை விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம். 1 உச்சியின் மகுட மின்ன வொளிர்தர நூதலி னோடை வச்சிர மருப்பி னொற்றை மணிகொள் கிம்புரி வயங்க மெய்ச்செவிக் கவரி தூங்க வேழமா முகங்கொண் டுற்ற கச்சியின் விகட சக்ர கணபதிக் கன்பு செய்வாம். |
ஆசிரியர் - சுப்ரமணிய சுவாமிகள் |
|
---|---|
திருப்பேரூர் பதிற்றுப்பத்தந்தாதி - காப்பு |
பார்பரவும் பேரூர்ப் பதிற்றுப்பத் தந்தாதி சீர்பரவச் செய்யவருள் செய்யுமா - லேர்பரவு மெட்டுக் குணத்தெம்மா னீன்ற விபமுகத்துப் பட்டிக்க ணேசன் பதம். |
பட்டணத்துப்பிள்ளையார் புராணம்- விநாயகர் துதி. |
இருநான்கு மதம்பொழியு மிருள்வேழமிரிந்தோடத் திருஞான மதமூன்றாஞ் சிவவேத மகிழ்களிறு பெருநாத முடிநடிக்கும் பெரியோன்ற னுடனாடிக் கருஞானமலைதொலைக்குங் கற்பகப்பொற்பதம்பணிவாம். |
ஆசிரியர் - கந்தப்ப சுவாமிகள் |
|
---|---|
கதிர்காமக்கலம்பகம்- விநாயகர் காப்பு |
சிலம்பகந்தோ றாடல் செயுங்கதிரே சன்மேற் கலம்பகப்பா மாலைக்சொலக் கான்மா - னலம்பகஞ்சேர் தும்பிமுகர் தாழ்கரடச் சோனைமழை மாறாத தும்பிமுகர் தாளே துணை. |
ஆசிரியர் - அந்தக்ககவி வீரராகவ முதலியார் |
|
---|---|
சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ்- விநாயகவணக்கம். |
பேறாய கீரன்முற் பகருமுரு காறெனப் பெருகாறு கண்டுமுலகிற் பேரருண கிரிதிருப் புகழ்கண்டு நாணாது பெறுமவத் துறுமாசையா லேறாய வாகன்க் கடவுடன் மைந்தனுக் கெமதுசெய் கைக்கந்தனுக் கிளமைவள மைப்பிள்ளை யங்கவிதை நூலெழுத வென்கரத் தாமரைதொழு மாறாயி ரத்துமுக முடையது சடைக்கா டமைத்தநா யகன்வருவிலா மந்தமா மேருவிற் பந்தவே தங்குறித் தறிவியா தன்கூறுநா ணூறாயி ரத்தின்மே லிருபதை யாயிரங் கவிதைநூ லகலமுழுது நுதிமருப் பாலெழுது மொருவா ரணத்தினிரு நூபுரத் தாமரையுமை. |
விநாயகர் துதி |
ஐந்து கரைத்தனை ஆனை முகத்தனை இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை நந்தி மகந்தனை ஞானக் கொழுந்தினைப் புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே. |
ஆசிரியர் - வ.உ. சி |
|
---|---|
பாடற்றிரட்டு - கணபதி துதி |
சிவன்றன் குமரன் றிருமான் மருகன் தவந்திகழ் நான்முகன் றன்னோ - டுவந்துவிளை யாடும் பெருமா னறுமுகற்கு முன்வந்தோன் பாடும் படியருள்க பா. |
ஆசிரியர் - முத்துக் கறுப்பணன் |
|
---|---|
பழனியாண்டவன் காவடிச் சிந்து |
பழனிப்பதி வாழும் - வேலர் பாதம்தனை நாளும் உளமேதினம் துதிக்க - வினை ஒடுக்கும் கதிகொடுக்கும் வளமேவிய பரனே - சுத்த மடவாழு தந்திமுகனே அழகாகிய குருவாய் - எனக் கருள்வாய் முன்பு வருவாய் |
சித்தராரூட நொண்டிச் சிந்து |
அத்திமா முகவன் செய்ய வடியினைக் கமலம் போற்றிச் சித்தரா ரூடம் தன்னில் செப்பிய பொருளா ராய்ந்து சுத்தமா யெவர்க்கும் தோன்றச் சுருக்கமாய் நொண்டிச்சிந்தாய் வித்தகர் அருளினாலே தமிழினால் விளம்பல் உற்றேன் |